இலங்கை

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழர் தாயகம் முழு அளவில் தயார்; 30 க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்களில் கண்ணீர் மல்கக் காத்திருக்கும் உறவுகள்

தமிழர் தாயகமெங்கும் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் அணிதிரண்டு வருமாறும் அந்தந்த துயிலும் இல்லங்களின் பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று 27 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில், ஆலய மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட அகவணக்கத்தை அடுத்து 6.07 மணியளவில் பொதுச்சுடர் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் ஏற்றப்படவுள்ளன.

தாயக மண்ணினதும் தமிழ் மக்களதும் உரிமைப்போரில் தங்களது உயிர்களை தியாகம் செய்து, இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தவருடமும் மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர்கள், உறவினர்கள். நண்பர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த உறவுகளுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தின நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியு டன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் போல இம்முறையும் வடக்கு கிழக்கு பகுதியில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தளர்வு காட்டப்பட்டாலும் ஆங்காங்கே பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பின் கெடுபிடிகள் காணப்படுகிறது.

வடக்கு-கிழக்கில் மாவீரர்களின் பெற் றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் கடந்த 21ஆம் திகதி முதல் உணர் வெழுச்சியுடன் இடம்பெற்றன. இதில் மாவீரர்களின் உருவப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நினைவேந்தல்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறான நிலையிலேயே இன்றைய இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுக்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக் கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு தமிழர் நாயகம் உணர்வெழுச் சியுடன் காணப்படுகின்றது.

இதற்கமைய இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எட்டு மாவட்டங்களிலும் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ் வுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *