உலகம்

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 180 மில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கீடு

செயற்கைக்கோள் வழிகாட்டல் மற்றும் நேரக் கணிப்பு தொழில்நுட்பங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய, தேசிய நேரக் கணிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக மேலும் 180 மில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் இதன் ஆரம்பச் செயற்பாட்டுத் திறனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செயற்கைக்கோள் சமிக்ஞைகள் முடக்கப்படுதல் மற்றும் போலியான சமிக்ஞைகள் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குவாண்டம் உணர்திறன் மற்றும் வழிகாட்டல் தொழில்நுட்பக் கொள்வனவுக்காக 138 மில்லியன் பவுண்ஸ் நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரித்தானியாவின் முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *