முச்சந்தி
தையிட்டியில் 2ஆவது நாளாகப் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் நேற்றைய தினம் மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.
![]()