உலகம்
14 ஆண்டுகளில் முதல் முறை – டவுனிங் தெரு வரும் இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியம், பிரதமர் ஆண்டி பர்னமை டவுனிங் தெருவில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது வீடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பது உள்ளிட்ட பொதுவான முன்னுரிமைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் டவுனிங் தெருவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
வருங்கால மன்னராக இளவரசர் வில்லியம் வளர்ந்து வருகின்ற நிலையில் மக்களின் நலத்திட்டங்கள் தொடர்பில் அவர் கரிசனைக் கொண்டுள்ளார்.
![]()