இலங்கை
IMF ஒப்பந்தத்தை தொடருமாறு முன்னாள் நிதி அமைச்சர் ஆலோசனை

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை குறைந்தபட்சம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்காவது அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து அரசாங்கம் எவ்வாறான முடிவை எடுக்கும் என எனக்கு தெரியாது. எனினும், இன்னும் 4 ஆண்டுகளுக்கு அத்திட்டத்துடன் பயணிப்பது நல்லது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வெளிநாட்டு கையிருப்பு ஒரு வீதமே அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வருவதாக தெரியவில்லை. “- என்றார் அலிசப்ரி.
![]()