பலதும் பத்தும்

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இருந்து திடீரென விலகும் அழகிகள்!

75-வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி பியூட்டோ ரிக்கோவில் (Caribbean puerto rico) உள்ள சான் ஜுவான் நகரில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. ஈன்னிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளும், விலகல்களும் இந்த போட்டியைச் சூழ்ந்துள்ளன.

ஆஸ்திரியா, பல்கேரியா, செயிண்ட் மார்ட்டின், மாலத்தீவுகள் மற்றும் மொராக்கோ நாடுகளின் அழகிகள் உடல்நல பிரச்சனைகள், விபத்து மற்றும் தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

6 ஆசிய நாடுகள் உரிம தொடர்பான சர்ச்சை

குறிப்பாக ஆஸ்திரியா அழகி விக்டோரியா அமர்சன் தனது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய 6 ஆசிய நாடுகள் உரிம தொடர்பான சர்ச்சைகள் காரணமாகப் போட்டியில் பங்கேற்கத் தடை செய்யப்பட்டுள்ளன.

நேபாளம், அங்கோலா உள்ளிட்ட சில நாடுகள் விசா பிரச்சினைகள் காரணமாக போட்டியில் கலந்துகொள்ளவில்லை. வியட்நாம் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டுக்கான 76-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி அங்குதான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் போட்டியின் தொடக்கத்திலேயே பல நாடுகளின் விலகல் மற்றும் தகுத்தடை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *