பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச் செய்யப்படும் – அமைச்சர் லால் காந்த

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தால் நாங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம்.அச்சட்டத்தின் பாரதூரத்தன்மையை நன்கு அறிவோம்.இச்சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டாது என விவசாயத்துறை,கால்நடை வளர்ப்பு மற்றும் நீர்பாசனத்துறை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பயண வழிகாட்டி
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அநுராதபுர புனித நகரில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடும் கஸ்ஸப்ப தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் உரிய நடவடிக்கையை முன்னெடுக்கும். அதேபோல் மகாநாயக்க தேரர்களும் இது குறித்து ஆராய வேண்டும்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒருசிலர் செயற்படும் விதம் முற்றிலும் வெறுக்கத்தக்கது.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் தான் பௌத்த மதம் ஒருசிலரால் விமர்சிக்கப்படும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவது குறித்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம்.அச்சட்டத்தின் பாரதூரத்தன்மையை அறிவோம்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. நீதிமன்றத்தின் அறிவிப்பை முழுமையாக செயற்படுத்துவோம். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானதல்ல என்றார்.
![]()