கவிதைகள்
“தத்துவம் உணர்த்திய தனிப்பெரும் கடவுள்நீ” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா



காவடி என்றதும் கந்தனே தெரிகிறாய்
சேவடி நாடியே யாவரும் வருகிறார்
மாவடி போற்றிட வாழ்த்தியே பாடுறார்
மாபெரும் ஜோதியாய் வந்தவன் நீயன்றோ
அப்பனாம் அரனுக்கு ஆசானாய் ஆகினாய்
தப்பிதம் செய்திட்டால் தண்டனை வழங்குவாய்
பிரம்மனின் செருக்கினை அடக்கிய வேலவா
பிரணவப் பொருளை விளக்கியே நின்றனை
வேடர் குலத்து வள்ளியை அணைத்தாய்
தேவ குலத்து தெய்வயானையை அணைத்தாய்
தாழ்வும் உயர்வும் சரிசமம் என்றிடும்
தத்துவம் உணர்த்திய தனிப்பெரும் கடவுள்நீ
எத்தனை மொழிகள் இருந்த போதிலும்
இன்தமிழ் மொழியை ஏற்றுமே நின்றார்
செந்தமிழ் கடவுளாய் கந்தா தெரிகிறாய்
உந்தனைத் தமிழால் பாடியே உவக்கிறோம் !
![]()