இந்தியா

உயிரிழந்த பின்பும் தேர்தலில் வென்ற 28 வயது வேட்பாளர்: இந்தியாவில் பெரும் சோகம்

இந்தியாவில் உயிரிழந்த பெண் வேட்பாளர் ஒருவர், அவர் போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜன சேனா கட்சியின் வேட்பாளரான 28 வயதுடைய கரபாட்டி திவ்யா, ஆந்திரப் பிரதேசத்தின் துமந்தினிகுடெம் கிராமத்துக்கான MPTC உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார்.

கடந்த நவம்பர் 5ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னர், திவ்யா திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் அவருக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கண்டறிந்த மருத்துவர்கள் மருந்துகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். எனினும், உடல்நிலை சீரடையாததால் ராஜமுந்திரியில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதயச் செயலிழப்பே அவரது மரணத்துக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை வெளியான தேர்தல் முடிவில் திவ்யா 350 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டபோதும், அதைக் கொண்டாட முடியாத நிலையில் அவரது குடும்பத்தினரும் கட்சியினரும் உள்ளனர். திவ்யாவின் மறைவால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளதுடன், வெற்றிச் செய்தி அவரது குடும்பத்தினருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *