உலகம்

கனடாவில் 200,000 பேருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க தீர்மானம்

தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் கீழ் சுமார் 200,000 பேர் குடியுரிமை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதையும், தற்போதுள்ள குடியேற்றப் பற்றாக்குறைகளைச் சரிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பின் கீழ், நாட்டில் ஏற்கனவே வசிக்கும் தகுதியுள்ள 200,000 வரையிலான தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு 2027 ஆம்ஆண்டுக்குள் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.

இந்த முன்னெடுப்பு தொழிலாளர்கள் மற்றும் மனிதாபிமான விண்ணப்பதாரர்கள் என இரண்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாக குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *