உலகம்
பிரித்தானியாவில் பனிமூட்டமான வானிலை – 30 வாகனங்கள் மோதி விபத்து

பிரித்தானியாவின் கென்டில் உள்ள M20 நெடுஞ்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து நேற்று மாலை ஹோலிங்போர்ன் Hollingbourne அருகே லண்டன் செல்லும் சாலையில் இடம்பெற்றது.
இதன்காரணமாக குறித்த சாலையின் இரு பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
விபத்து நடந்த நேரத்தில் பனிமூட்டமான வானிலை நிலவியதாகவும், இதன்காரணமாக சாரதிகளின் பார்வை திறன் குறைந்து மேற்படி அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கிலாந்தின் பெரும் பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()