உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆகிறார் கேரளாவில் பிறந்த நித்யா ராமன்

அமெரிக்கா லாஸ் ஏஞ்சலஸ் மேயர் தேர்தலில், கேரளாவில் பிறந்த ஜனநாயக சோசலிச தலைவரான நித்யா ராமன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயராக பொறுப்பேற்கும் முதல் தெற்காசியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 1981-இல் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிறந்த நித்யா ராமன், தனது 6-வது வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், எம்.ஐ.டி நிறுவனத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

தற்போது லாஸ் ஏஞ்சலஸ் நகரக் குழு உறுப்பினராக உள்ள 45 வயதான நித்யா ராமன், மலிவு விலையிலான வீடுகள், குழந்தைகள் விளையாடப் பூங்காக்கள், சீரான போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தனது முக்கிய இலக்கு என உறுதியளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *