இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 21… செங்கதிரோன்

கதிரவன் கலைக்கழகத்தின் பொன்விழா

28.04.1976 அன்று மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஊரில் தோற்றம்பெற்று கலை இலக்கியச் செயற்பாடுகளை ஆரம்பித்துப் பின் கல்வி – சமூகம் – ஆன்மீகம் எனக் கட்டம் கட்டமாகத் தன் பணிகளை வியாபித்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து தனது பொன்விழாவினை வெகு கோலாகலமாகக் கொண்டாடியதென்றால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் அது வரலாற்றுப் பதிவுக்குரியதொரு பாரிய சாதனையாகும்.

ஆம்! ‘கதிரவன் கலைக்கழகம்’ தனது பொன்விழா ஆ;ணடுக் (1976 – 2026) கொண்டாட்டத்தை 27.09.2026 அன்று மட்டக்களப்பு ‘ஈஸ்ட்லகூன் ஹோட்டல்’ இல் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. இவ்விழாவிலே துணைவியார் சகிதம் நான் கலந்து கொண்டேன்.

கதிரவன் கலைக்கழகப் பொன்விழாச் சபையின் ஆலோசகர்களில் ஒருவராக என்னை இணைத்துக் கொண்டமை மட்டுமல்லாமல் விழாவில் ‘கதிரவன் விருது – 2026’ பெற்ற ஐம்பது பேர்களில் முதலாவது விருதாளராக என்னை அடையாளப்படுத்திக் கண்ணியப்படுத்திற்று.

கதிரவன் கலைக்கழகத்தலைவர் கதிரவன் த. இன்பராசா அவர்களின் தலைமையில் பி.ப 3.30 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை நடைபெற்ற இவ்விழாவில் கழகத்தின் ஐம்பதாண்டுப் பணிகளையும் ஆவணப்படுத்தியதாக ‘ஊரிலிருந்து உலகம் வரை’ எனும் தலைப்பிலான பொன்விழாச் சிறப்பு மலரும் வெளியிடப்பெற்றது.

‘ஊரிலிருந்து உலகம் வரை’ என்பதே பொன்விழாவின் தொனிப்பொருளுமாகும்.

கதிரவன் கலைகழகத்தின் தற்போதைய தலைவரான கதிரவன் த. இன்பராசா அவர்களின் தந்தையார் திரு. சின்னத்தம்பி தங்கராசா அவர்களால், அவர் இருபத்திரண்டு வயது இளைஞராகவிருக்கும்போது (தற்போது அவருக்கு வயது எழுபத்தியிரண்டு) புதுக்குடியிருப்பு கிராமத்தைத் தளமாகக் கொண்டு தாபிக்கப்பெற்றதே ‘கதிரவன் கலைக்கழகம்’
புதுக்குடியிருப்பு மட்டக்களப்பு நகரிலிருந்து பதினான்கு கிலோமீற்றர் தூரத்தில் வடக்கே தாழங்குடா கிராமத்தையும், தெற்கே கிரான்குளம் கிராமத்தையும், கிழக்கே வங்களாவிரிகுடாக் கடலையும், மேற்கே மட்டக்களப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டமைந்த இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமமாகும்.

இயந்திர நாகரீகம் – உலகமயமாக்கல் செயற்பாடுகள் – தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி போன்ற புறத்தாக்கங்களால் கற்பழிந்துவிடாமல் தன்னைத் தற்காத்துக் கொண்டு பாரம்பரியக் கலை இலக்கியங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்து வரும் கிழக்கிலங்கைக் கிராமங்களுள் புதுக்குடியிருப்புமொன்றாகும். மருதமும் நெய்தலும் இதன் நிலப் பண்புகள். கணபதியும் (பிள்ளையாரும்) கண்ணகையும் இக்கிராமத்தின் காவல் தெய்வங்கள்.

புதுக்குடியிருப்பு மையப்பகுதியிலமைந்துள்ள அருள்மிகு விக்கினேஸ்வரர் மற்றும் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் பொழுதுபோக்காக ஒன்றுகூடிய இளைஞர்கள் மத்தியில், கலைக்கழகமொன்றினை உருவாக்கி அம்முறை கண்ணகை அம்மன் கோயில் சடங்கின்போது நாடகம் அரங்கேற்ற வேண்டுமென்று ஏற்பட்ட எண்ணத்தின் விளைவாக அதற்கெனக் கூட்டப்பெற்ற கூட்டத்தில் 28.04.1976 அன்று கால்கோள் கொண்டதே ‘கதிரவன் கலைக்கழகம்’

1976 ஆம் ஆண்டு ‘சதிகாரத்தம்பியால் கலைந்த உறவு’ எனும் சமூக நாடகமும் ‘போடியார் வீட்டுக்கல்யாணம்’ எனும் நகைச்சுவை நாடகமும் தங்கராசா அவர்களினால் தயாரிக்கப் பெற்று புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் உழவு இயந்திரப் பெட்டியில் அமைந்த மேடையிலே அரங்கேற்றம் கண்டன. இதுவே கதிரவன் கலைக்கழகத்தின் தோற்றுவாய் ஆகும்.

புராண – சமூக – நகைச்சுவை மேடை நாடகங்கள், நாட்டுக்கூத்து, கரகம், கும்மி, வசந்தன், காவடியாட்டம் முதலான கலை நிகழ்வுகளைப் புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் சடங்கினையொட்டி ஆண்டுதோறும் ஏனைய ஆலயச் சடங்குகள் திருவிழாக்களின்போது புதுக்குடியிருப்பு மட்டுமல்ல அயல் கிராமங்களான கிரான்குளம், தாழங்குடா, அரசடித்தீவு, ஆரையம்பதி, பன்குடாவெளி, கோவிக்குளம், மாவிலங்கத்துறை, கல்லடி, மட்டக்களப்பு, நாவற்குடா ஆகிய இடங்களிலும் அரங்கேற்றி பரிசில்களையும் பாராட்டுக்களையும் குவித்தபடி பயணித்த கதிரவன் கலைக்கழகத்தின் செயற்பாடுகள் இசைநாடகம், தாளலயம், விவாதம், நவீன நாட்டக்கூத்து, வில்லுப்பாட்டு, விழிப்புணர்வு வீதி நாடகம் என வியாபித்தன.
1976 இல் தோற்றம்பெற்று 2000 வரை அதன் தாபகர் கலாபூஷணம் கிராமியக்கலைஞர் சி.தங்கராசா தலையிலும் 2000 இலிருந்து 2005 வரை தங்கராசா அவர்களின் இரண்டாவது புதல்வாரன (அமரர்) கோபாலகிருஸ்ணன் தலைமையிலும் 2005 இலிருந்து இற்றைவரை தங்கராசா அவர்களின் மூன்றாவது புதல்வரான இன்பராசா தலைமையிலும் வாழையடி வாழையாக வளர்ச்சி கண்டதே ‘கதிரவன் கலைக்கழகம்’.

1976 இல் புதுக்குடியிருப்பு ஊர் மண்ணில் முளைவிட்ட கதிரவன் கலைக்கழகம், வேரோடி வளர்ந்து காலத்திற்குக்காலம் ‘கதிரவன் பாலர் பாடசாலை’ (2007) – ‘கதிரவன் கல்வி நிலையம்’ (2007) – ‘கதிரவன் கல்வி இலக்கிய கலைச் சஞ்சிகை’ (2008) – ‘கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம்’ முளுனுழு (2010) – ‘கதிரவன் பட்டிமன்றப்பேரவை’ (2015) – கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ‘ஒளவை அவை’ (2016) – கதிரவன் தமிழ் காணொளி ‘யூரியூப்’ (2022) ஆகிய விழுதுகளை ஈன்று இன்று மட்டக்களப்புத் தமிழகத்தில் கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கும், ஆற்றுகையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நிழல்தரும் பெருவிருட்சமாகக் கிளைபரப்பிக் கம்பீரமாக நிற்கிறது.

27.09.2026 அன்று மட்டக்களப்பு ஈஸ்ட்லகூன் ஹோட்டலில் ‘நுயுளுவுடுயுபுழுழுN ர்ழுவுநுடு’ இல் நடைபெற்ற கதிரவன் கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வில், இந்து (சிவயோகச் செல்வன். த.சாம்பசிவ சிவாச்சாரியார்), கிறிஸ்தவ (அருட்தந்தை.அ.நவரட்ணம் – நவாஜி அடிகளார்), இஸ்லாம் (மௌலவி முசாதிக்) ஆன்மீக அதிதிகளும், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையிலே மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தினரும், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையிலே கண்ணகி கலை இலக்கியக் கூடலினரும், தேசபந்து மு.செல்வராசா தலைமையிலே மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினரும், அண்ணாச்சி சண்.சிவபாதசுந்தரம் தலைமையிலே வேல்முருகன் சகோதரர்கள் வர்த்தக நிறுவனத்தினரும், அரிமா அ.செல்வேந்திரன் தலைமையிலே மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தினரும், பணிப்பாளர் மு.சிவகுமார் தலைமையிலே டீயவவiஅநனயை ஊடகத்தினரும், யாழ்ப்பாணத்திலிருந்து வைத்திய நிபுணர் சி.சிவசுதன் தலைமையில் ஈழத்தமிழ்க்கலைஞர் ஒன்றியத்தினரும், தேவ.அலோசியஸ் தலைமையில் மட்டக்களப்பு பைன் ஆர்ட்ஸ் கழகத்தினரும் குiநெ யுசவள உடரடிஇ ச.ஜெயராஜா தலைமையில் உதவும் கரங்கள் அமைப்பினரும், சா.சுதாகரன் தலைமையில் புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பினரும், வளைகுடா வானம்பாடிகள் சமூக நல மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதி இணைப்பாளர் ரகுநாதனும், வே.தட்சணாமூர்த்தி தலைமையில் புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையினரும், செ.விமலேஸ்வரன் தலைமையில் தாழங்குடா ஆலய பரிபாலன சபையினரும், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் சைவப்புலவர் திருமதி.சிவஞானசோதி ஞானசூரியம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைச் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சிஸ், சோழன் உலக சாதனைப்புத்தக நிறுவனப் பிரதிநிதி பர்சான், மட்டக்களப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் திருத்தொண்டர் சபை பிரதிநிதி, ச. சண்முகசேகர், அகிலன் பவுண்டேசன் வி.ஆர்.மகேந்திரன், பரசுராமர் நிதியம் (சுவிஸ்) பிரதிநிதி பு. பிரபாகர், சென்னை கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கத் தலைவி கவிஞர் ரித்துசூரியா, போபால் கம்பன்கழகம் மற்றும் டில்லி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் பா.குமார், கதிரவன் கலைக்கழகத்தின் சென்னை இணைப்பாளர் சங்கர் கந்தசாமி, மலேசிய கலை இலக்கியப் பேரவையின் முன்னாள் தலைவர் இராஜேந்திரன், எழுத்தாளர் சுப்பிரமணியம் கோவிந்தசாமி, எம்.என்.நிஸ்வத்துல் பாத்திமா எச். டீன் (கொழும்பு), மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவர் சீ.யோகேஸ்வரன், ஓம் சர்வதேச அறக்கட்டளைத் தலைவர் நடராசா கனகதீபன் மற்றும் கதிரவன் கலைக்கழகத்தின் வவுனியா இணைப்பாளர் றெபாட் சுஜீவன் (வவுனியா) கவிஞர்.எஸ்.பி.நாதன் (அம்பாறை) ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராசசிங்கம், இந்நாள் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஞா.ஸ்ரீநேசன், கௌரவ.னுச.இ.ஸ்ரீநாத், கௌரவ.இரா.சாணக்கியன் ஆகியோர் என்று பன்னாட்டு விருந்தினர்கள் – விருதாளர்கள் – கிழக்கு மாகாண பேரவை முன்னாள் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி சி.அமலநாதன், திறைசேரி பணிப்பாளர் நாயகம் திரு வ.வாசுதேவன், திருகோணமலை மாநகரசபை ஆணையாளர் திரு உ.சிவராசா, கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனப் பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி ஆகிய மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் – அரச உயரதிகாரிகள் – எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – ஊடகவியலாளர் – கலைஇலக்கிய ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை அணி செய்தனர்.

ஈஸ்டலகூன் ஹோட்டலின் நுழைவாயிலிருந்து மாலை அணிவித்து விருந்தினர்கள் வரவேற்கப்பெற்று மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பெற்றுப் பின்,
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய பொன்விழா மேடை நிகழ்வுகள் மௌன இறை வணக்கம் – தமிழ்மொழி வாழ்த்து – கதிரவன் கீதம் – வரவேற்பு நடனம் – வரவேற்புரை – ஆசியுரை – தலைமையுரை – ‘ஊரிலிருந்து உலகம் வரை’ பொன்விழாச் சிறப்புமலர் வெளியீடு – கலை நிகழ்வுகள் – வாழ்த்துரைகள் – ‘கதிரவன் காலடி’ கைநூல் விநியோகம் எனத்தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் கனகச்சிதமாகக் கட்டமைக்கப்பெற்றிருந்தன.

கதிரவன் கலைக்கழகத் தாபகர் தங்கராசா அவர்கள் கதிரவன் கலைக்கழக உறுப்பினர்களால் அழகிய முடிசூடப்பெற்றுத் ‘தாபகர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப் பெற்றமையும், ‘ஊரிலிருந்து உலகம்வரை’ பொன்விழாச் சிறப்பு மலரின் முதற்பிரதியைக் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த திரு.திருமதி.செந்தூரன் குடும்பத்தினர் தாமாகவே முன்வந்து பெருந்தொகையான 111இ111ஃஸ்ரீ (நூறாயிரத்துப் பதினோராயிரத்து நூற்றிப் பதினொரு ரூபாய்) வழங்கிப் பெற்றுக்கொண்டமையும், கதிரவன் கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் ஆதரவு வழங்கிச் செயற்பட்ட பேராளர்கள் ஐம்பது பேருக்குக் கதிரவன் விருது – 2026 வழங்கிக் கண்ணியப்படுத்தியமையும், விருந்தினர்களுக்கும் விழா அனுசரணையாளர்களுக்கும் சிறப்புக்கௌரவச் சின்னங்கள் வழங்கப்பெற்றமையும் கதிரவன் கலைக்கழ உறுப்பினர்களின் சாதனைபடைத்த குழந்தைகளைக் கௌரவப்படுத்தியமையும் பொன்விழா நிகழ்வின் முத்தாய்ப்பான அம்சங்களாகும்.

நான் அறிந்தவரையில் மட்டக்களப்புத் தமிழகத்தில் கலை இலக்கிய அமைப்பொன்று தன் பயணத்தில் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்து பொன்விழாவை இவ்வளவு பிரமாண்டமாகக் கொண்டாடியது இதுவே முதல் தடவையாகும். அர்ப்பணிப்புடன்கூடிய கலை இலக்கிய சமூக ஈடுபாடும் கடின உழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணங்களாகும். கலை இலக்கிய அமைப்புகளுக்குக் கதிரவன் கலைக்கழகம் ஒரு முன்னுதாரணமுமாகும்.

கடந்த ஐம்பது வருடகாலப் பயணத்தில் பொன்விழாத்தினமான 27.09.2029 வரை இருநூற்றிற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களையும் – இரண்டாயிரத்தி ஐநூறிற்கும் மேற்பட்ட வீதி நாடகங்களையும் – இலங்கை, தமிழ்நாடு இந்தியா என நூற்றியெண்பத்தியெட்டுப் பட்டிமன்றங்களையும் – பாடல் இறுவட்டுக்கள், குறும்படங்கள், சஞ்சிகை, நூல் மற்றும் மலர் வெளியீடுகளையும் – 2020, 2026 ஆம் ஆண்டுகளில் இரு ஒளவை விழாக்களையும் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ‘கதிரவன் தமிழ்’ ‘பூரியூப்’ காணொளிகளையும் – ஐநூறிற்கும் மேற்பட்ட கரகம், கும்மி, வசந்தன், காவடி, நாட்டுக்கூத்து முதலிய கிராமியக்கலை நிகழ்வுகளையும் இசைநாடகம், வில்லுப்பாட்டு, தாளலயம், நவீனநாட்டுக்கூத்து முதலிய நவீன கலைவடிவங்களையும் பதிவுக்குள்ளாக்கியுள்ளமை வியந்து பாராட்டப் பெற வேண்டியதாகும். இத்தகைய அர்ப்பணிப்பும் ஆற்றலும் நிரம்பப்பெற்ற ‘கதிரவன் கலைக்கழகம்’ மேலும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பணிதொடர மனப்பூர்வமாக வாழ்த்தி மகிழ்வோமாக.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *