பலதும் பத்தும்

UK வில் 39 பாடசாலைகளில் சைபர் தாக்குதல்; விபரங்கள் dark web இல் கசிவு

பிரித்தானியாவில் 39 பாடசாலைகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3,20,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் திருடப்பட்டு, அவை ‘டார்க் வெப்’ (dark web) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் நகர நிர்வாகம் (Bristol City Council) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குடும்பங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருடப்பட்ட தரவுகள் குறித்த விரிவான விவரங்களை இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியவில்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *