அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவு அனைவருக்கும் கிடைத்த நிவாரணம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு எம் அனைவருக்கும் கிடைத்த நிவாரணம் . இதுதான் அமெரிக்க மக்கள் ட்ரம்புக்கு வழங்கிய மிகப்பெரிய பதிலடி. அமெரிக்க மக்களின் தீர்ப்பை பாராட்டுகிறேன் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நம்பிக்கை பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு எம்மனைவருக்கும் ஒரு நிவாரணமாக அமைகிறது. ஏனெனில் அவர் மேற்கொண்டுவந்த பயங்கரவாதத்தினால் முழு உலகமும் துன்பத்துக்கு ஆளாகி இருந்தது. தற்போது தேர்தலில் செனட் மற்றும் காங்கிரஸில் அவரது பெரும்பான்மையை இழந்திருக்கிறது.
இந்த தோல்விக்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. அதாவது அவர் யுத்ததுக்கு செல்லப்போவதில்லை என வாக்குறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை மீறி செயற்பட்டார். அடுத்தது, குடியகல்வு தொடர்பான அவரது தீர்மானம். என்றாலும் அவரின் கன்னத்தில் விழுந்த இந்த அறையால், பலர் ஆளுநர்களாகவும் செனட்டர்களாகவும் தெரிவாகி இருக்கிறார்கள். இதுதான் அமெரிக்க மக்கள் ட்ரம்புக்கு வழங்கிய மிகப்பெரிய பதிலடி .
எனவே மக்களின் தீர்ப்பை மதித்து அவர் யுத்தத்தை நிறுத்த வேண்டும். அதேபோன்று நெதன்யாகும் பலஸ்தீன், லெபனானுடான யுத்தத்தை நிறுத்த வேண்டும். இது முழு உலகுக்கும் அழிவை ஏற்படுத்துகிறது. அதனால் அமெரிக்க மக்களின் தீர்ப்பை பாராட்டுகிறேன் என்றார்.
![]()