உலகம்

ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன்பாக கூரிய ஆயுத தாக்குதல்

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் தூதரக ஊழியர்கள் மற்றும் ஜோர்தானில் வாழும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தானிய அதிகாரிகள் இத்தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயலாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *