கொழும்பு மாவட்டத்திற்கு ஒரு எம்.பி.பதவி கூடுகிறது; பதுளைக்கு ஒன்று குறைந்தது

கொழும்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பதுளை மாவட்டத்திற்கான ஆசன ஒதுக்கீடு 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான முதன்மை வாக்காளர் பதிவேடு மற்றும் 2026 (1) ஆம் ஆண்டிற்கான கூடுதல் வாக்காளர் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98(8) ஆம் பிரிவுக்கு இணங்கவே இந்த ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்குரிய 2511/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்குமான திருத்தப்பட்ட பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டுள்ளது..அதற்கமைய இந்த இரு மாவட்டங்களில் மாத்திரமே ஆசனங்களின் எண்ணிக்கை மாறியுள்ளபோதும் ஏனைய மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை தற்போதுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு;
கொழும்பு 18,அனுராதபுரம் 9,அம்பாறை 7,இரத்தினபுரி 11,கம்பஹா 19,களுத்துறை 11,காலி 9,குருநாகல் 15, கேகாலை 9,திருகோணமலை 4,நுவரெலியா 8,பதுளை 9,புத்தளம் 8,பொலநறுவை 5,கண்டி 12,மட்டக்களப்பு 5,மாத்தளை 5,மாத்தறை 7,மொனராகலை 6,யாழ்ப்பாணம் 6,வன்னி 6,அம்பாந்தோட்டை 7.
![]()