சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் அடுத்தத் திட்டம்!; திரும்பி வருவதற்கான வாய்ப்பு இல்லையாம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்க வேண்டாம் எனக்கோரி, சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றால் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர மாட்டார். திரும்பி வருவார் என்ற நம்பிக்கையும் இல்லை என்று குறித்த சிவில் சமூக செயற்பாட்டாளர் சிரந்த அமரசிங்க சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தெரிவித்து, இவர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற பின்னர் இன்றுவரை அவரை நாட்டிற்கு அழைத்து வர முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றால் மீண்டும் இலங்கைக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்பதுடன், இந்த நாட்டில் சுமார் 300 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொறுப்புக் கூற வேண்டிய நபராகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவராகவும் உள்ளார்.
அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருப்பதால்தானே வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டது.
எனவே, அவரைச் சந்தேகநபராகப் பெயரிடவில்லை என்ற காரணத்தைக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அனுதாபம் காட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
![]()