உலகம்

அமெரிக்க இடைத் தேர்தல் – 94 வருடங்கள் போராட்டம், மகுடம் சூடியது ஜனநாயகக் கட்சி

அமெரிக்காவின் கேன்சஸ் Kansas மாகாணத்தில் கடந்த 94 வருடங்களில் முதல் முறையாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று செனட் சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து ஆடம் ஹாமில்டன் வெற்றிவாகை சூடியுள்ளார்.

2024 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 16 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த ஒரு மாகாணத்தில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு மக்கள் பெருமளவு வாக்களித்திருப்பது ட்ரம்ப் நிர்வாகத்தின்மீது மக்கள் சலிப்படைந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய யுனைடெட் மெதடிஸ்ட் சபையின் போதகரான ஹாமில்டன், மலிவு விலை மற்றும் இருகட்சி ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.

தன்னை ஒரு “சுயேச்சையான சிந்தனை கொண்ட ஜனநாயகவாதி” என்று அழைத்துக்கொண்ட அவர், குடியரசுக் கட்சியினர் தன்னைத் தீவிர இடதுசாரி என்று சித்தரிப்பதையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *