இலங்கை

1990 க்கு பின் காங்கேசன்துறையில் அமையும் புதிய தபால் நிலையம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

 

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

 

பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

 

இந்நிலையில், காங்கேசன்துறை உப தபால் நிலையம் அமைந்திருந்த பகுதியில் 32.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

 

இதற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *