உலகம்

நைஜீரியாவில் கொள்ளையர்கள் அட்டகாசம் – 40 பேர் படுகொலை

நைஜீரியாவின் வடகிழக்கு தராபா மாநிலத்தில் உள்ள கிராமமொன்றின் மீது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல்   வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 10 பேர் கொல்லப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தாலும், நேற்று மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

டுமையான துப்பாக்கிச் சூட்டுடன் கிராமத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரிகள் கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வட நைஜீரியாவில், உள்ளூரில் கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும், கனரக ஆயுதங்களைக் கொண்ட குற்றக் கும்பல்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இவர்கள் கிராமங்களைத் தாக்கி, பணத்திற்காக குடியிருப்பாளர்களைக் கடத்திச் செல்வதுடன், கால்நடைகளையும் திருடிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *