பிரித்தானியாவை தாக்கிய ப்ளூ’ புயல் – பல பகுதிகளில் மின் தடை

பிரித்தானியாவின் பல பகுதிகளில் ப்ளூ’ புயல், கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புயல் காரணமாக கனமழை மற்றும் மணிக்கு 85 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்துக்கும், வடக்கு அயர்லாந்திற்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் பிரித்தானியாவை தாக்கிய இரண்டாவது பெயரிடப்பட்ட புயல் இதுவாகும். மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், அதனை மீட்டெடுக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 10,860 வீடுகள் மற்றும் வளாகங்களுக்கான மின்சார விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பலத்த காற்று, மின்வெட்டு, பறக்கும் குப்பைகள், சரிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் மரங்கள், போக்குவரத்து இடையூறு மற்றும் பெரிய அலைகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()