நடுகைக்காரி 90…. ஏலையா க.முருகதாசன்


மருமகளே உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல சோர்ந்து போன தனது தலையைச் சாய்க்க தனது தோளைக் கொடுத்து ஆறுதல்படுத்தி தோளையும் முகத்தையும் தடவிக் குடுத்து வழிந்த தனது கண்ணீரை சீலைத் தலைப்பால் துடைத்துவிட்ட மாமியாரையும,; அண்ணி இது சின்ன விடயம் என தனது இரு கைகளையும் பற்றி சிலம்பரசியின் கண்ணீரைத் துடைத்துவிட்ட கணவனின் தங்கையான மங்களேஸ்வரியை நினைச்சு அறைக்குள் இருந்தபடியே அழுதாள்
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது போல,இதுவரை நாட்களும் கணவன் முருகதாசனின் தாய்தகப்பன் வீட்டுப்பக்கமே எட்டிப் பார்க்காத சிலம்பரசிக்கு சங்கத்தில் நடந்த சம்பவம் அவளுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துவிட்டது.தனது சுயமரியாதையே போய்விட்டது என்று சிலம்பரசி விக்கித்து நின்ற போது உன்னைக் கைவிட மாட்டோம் உனக்கு நாங்களிருக்கிறோம,நீ எங்களுடைய மருமகள்; என கணவனின் தாய்தப்பனின் வீடும்,மாமன் மாமியின் மைத்துனியின் ஆறுதல்படுத்திய அரவணைப்பும் அவள் மீது அக்கறைமிகுந்த பாசத்தைக் காண்பித்த விதத்தாலும் அவள் நெகிழ்ந்து நின்றாள்.

அண்ணி ஒரு கிழமைக்குப் பிறகு உங்கடை வீட்டுக்குப் போய்விடுவீர்களா என முருகதாசனின் தங்கச்சியார் யதார்த்தமாகக் கேட்பது போலக் கேட்டாலும்,அண்ணி தனது அப்பா அம்மா வீட்டுக்கு ஒரு கிழமைக்கப் பிறகு போய்விடுவாரோ என கொஞ்சம் ஏக்கத்துடன் கேட்ட போது நான் ஏன் போகிறேன் இதுவும் என் வீடுதானே,நல்ல மச்சாள் உங்களை விட்டிட்டோ, நான் விட்ட எந்தத் தவறையுமே பெரிசு படுத்தாத மாமா மாமியை விட்டிட்டோ நானேன் போகிறேன் என்று சிலம்பரசி சொன்னதும் மங்களேஸ்வரி மகிழ்ச்சியடைந்தாள்.
புpன்னேரம் நாலரை மணிக்கு வேலை முடிஞ்சு முருகதாசன்: மகாஜனக் கல்லாரியடியில் இருந்த தங்களுடைய வீட்டுக்கு வர பின்னேரம் ஐஞ்சேகாலாகிவிட்டிது.
சிலநேரம் சில சூழ்நிலைகள் உறவுகளுக்கிடையில் இறுக்கமான நிலையை ஏற்படுத்திவிடுவதுண்டு.அப்படித்தான் சிலம்பரசியும் முருகதாசனும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டமையும், இதுவரைநாளும் தாய்தகப்பன் வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் வந்து போன முருகதாசன் இரவு நேரங்களில் மனைவி வீட்டிலேயே தங்கி வேலைக்குப் போவதும்,அவனும் சிலம்பரசியும் மத்தியானச் சாப்பாட்டை சங்கத்தின் கன்ரீனில் சாப்பிடுவதும் வழக்கம்.
ஒவ்வொரு நாளும் வேலை முடிஞ்சு மனைவயை அவளின் p தாய்கப்பன் வீட்டிலை கொண்டு போய் விட்டிட்டு,தனது தாய் தகப்பன் வீட்டுக்கு வரும் முருகதாசன் திரும்பிப் போகும் போது தாய் செய்து கொடுத்த இரவுச்சாப்பாட்டை கொண்டு போய் தானும் மனைவியம் சாப்பிடுவது கிழமைக்கு இப்படியான வழமை ஆறு நாட்களாவது.இருக்கும்.
சிலம்பரசி கணவனின் தாய்தகப்பன் வீட்டுக்கு திருமணத்துக்குப் பின்னர் வரவில்லையே தவிர தனது மாமியார் குடுத்துவிடும் சாப்பாட்டை உருசித்து உருசித்துச் சாப்பிடுவதைப் பார்த்த சிலம்பரசியின் தாய்,தாயாடு பகை குட்டியாடு உறவோ என முணுமுணுப்பதும் உண்டு.
புரிந்துணர்வற்ற மனக்கசப்பும் காரணமில்லாத குறை சொல்லலும் ஒரு போதும் நிரந்தரமில்லை என்பதற்குச் சாட்சியாக சிலம்பரசி தனது கணவனின் வீட்டுக்கு வந்தது மட்டுமல்ல இனி இங்கேயே நிரந்தரமாக இருக்கப் போவதாக முடிவெடுத்துவம் விட்டாள் சிலம்பரசி.

இவ்வளவு நாளும் முருகதாசனின் அறையை யாருமே பாவிக்கவில்லை.அண்ணயிற்றை அறை அவனுக்குத்தான் உன்னுடைய அறையோடை சேர்த்து அதையும் பாவிச்சு விடாதே என்றைக்கோ ஒரு நாள் உன்ரை அண்ணி வருவாள் அதில்தான் தங்குவாள் என்று மங்களேஸ்வரியின் தாய் சொன்னது இன்று மெய்யாகிவிட்டது.
தான் பார்வதியைப் பார்த்து அவள் எப்பகுதியைச் சேர்ந்தவள் என்பதைக் குத்திக்காட்டி அலட்சியமாகச் சொன்னதும் அதன் விளைவாக தன்னை ஒரு கிழமைக்கு வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்த போது என்ன செய்வதென்றே தெரியர்து,தான் பார்வதியுடன் நடந்து கொண்டது சரியா தவறா என்பதற்கப்பால் தான் ஒரு பட்டதாரியாகவிருந்தும் தனது கல்வி அறிவுக்கு முதன்மை கொடுக்காது பார்வதியின் சுயமரியாதைதான் பெரியது மதிக்கப்:பட வேண்டியது என்பதை சங்கத்தின் தலைவரும் முகாமையாளரும் அதை நிலைநாட்டிய போது தான் அவமானப்பட்டு பரிதவித்து கண்ணீரோடு நின்ற தருணத்தில் மருமகளே உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல சோர்ந்து போன தனது தலையைச் சாய்க்க தனது தோளைக் கொடுத்து ஆறுதல்படுத்தி தோளையும் முகத்தையும் தடவிக் குடுத்து வழிந்த தனது கண்ணீரை சீலைத் தலைப்பால் துடைத்துவிட்ட மாமியாரையும,; அண்ணி இது சின்ன விடயம் என தனது இரு கைகளையும் பற்றி சிலம்பரசியின் கண்ணீரைத் துடைத்துவிட்ட கணவனின் தங்கையான மங்களேஸ்வரியை நினைச்சு அறைக்குள் இருந்தபடியே அழ,அண்ணி திரும்பத் திரும்ப அதை யோசிச்சு அழாதையுங்கோ என ஆறுதல்படுத்தினாள் மங்களேஸ்வரி
துணிவாங்க வந்த அவளை எனக்குத் தெரியும் அவள் யாற்றை பகுதியென்றும் தெரியும்,அவளிட்டை நான் தோற்றுப் போயிட்டேன் அதுதான் எனக்கு அவமானமாக இருக்குது.நான் ஒரு பட்டதாரி,நான் நினைக்கிறன் அவள் இப்பத்தான் எஸ்.எஸ் சி படிக்கிறவளாக இருக்கலாம்.அவளுக்கிருந்த திமிர்தான் என்னைத் தலைகுனிய வைச்சிருக்குது.அவள்தான் பரவாயில்லை தனக்கு நேர்ந்தது பாதிப்பு என்று நினைச்சுக் கொண்டு ஜி.எம்மிட்டையும் தலைவரிட்டையும் சொன்னாள்.அவளோடை பட்டும் படாமல் பட்டத்தின்ரை வால் மாதிரி ஒருத்தர் போனாரே அவருக்கு என்ன வந்திட்டு அவரென்ன தெல்லிப்பழைப் புரட்சியாளனோ,எனக்கென்றால் அவரும் அவளின்ரை ஆட்களாகத்தானிருக்கு வேண்டுமென்று நினைக்கிறன்,ஒரு வேளை அவளின்ரை லவ்வரோ தெரியாது, காந்தம் இரும்பை இழுப்பது போல அவனும் அவளோடை போகிறான்,அவனை நினைக்கத்தான் தாங்க முடியாத வெப்பியாரமாகக் கிடக்குது என்று சிலம்பரசி கொஞ்சம் கோபமாக காலமை சங்கத்திலை; நடந்ததை ஞாபகப்படுத்திக் குமுறிக் கொண்டிந்தாள்.
தான் அவமானப்பட்டதாக நினைச்சு அழுதவள்,அன்று சங்கத்தில் தனக்கு அவமானமேதான் ஏற்பட்டது என நினைச்சு இப்பொழுது பார்வதியின் மீதும் ஞானத்தின் மீதும் கோபப்பட்டாள்.
ஒரு சின்னவிசயத்தை போகிற போக்கிலை கவனிக்காமல் விடவேண்டியதை,இந்தக் காதாலை கேட்டு அந்தக் காதாலை விட வேண்டியதை நெருப்பிலை காலை வைச்ச மாதிரி ஜிஎம்மும் தலைவரும் துள்ளியடிச்சு எனக்கு தண்டனை குடுத்திட்டினம் என்று கூரையைப் பார்த்தபடி புறுபுறுத்துக் கொண்டிருந்தாள் சிலம்பரசி.
ஏதோ ஒரு விசயத்தைக் கண்டுபிடித்தவளாக பொறு பொறு இப்ப ஞாபகம் வருது.நானும் கொண்ணையும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிபோல அளவெட்டிக்குச் சைக்கிளிலை போகேக்கிலை கொஞ்சப் பொம்பிளையளோடை வெள்ளவாய்க்காலுக்குள்ளை இறங்கி வயல்பக்கமாக இந்தப் பெட்டையும் போனதைக் கண்டனான் என்றவள் தன்னைக் கதாநாயகன் ஜெமினி கணேசன் என்று நினைச்சுக் கொண்டு விழுந்தடிச்சு அவளோடை அவளுக்கு வக்காலத்து வாங்கப் போனானே அவனை எங்கையாவது கண்டிருக்கியா மங்களம் இல்லாட்டி கொண்ணைக்கு அவனைத் தெரியுமா?.எனக்கென்றால் அவன் படிக்கிற பொடியன் மாதிரித்தான் தெரியுது என்றவுடன் மங்களேஸ்வரிக்குத் திக்கென்றது.

தன்னோடு ஞானம் படிக்கிறவன் என்ற அசிகையறிஞ்சுதான் தெரியாத மாதிரி தூண்டில் போட்டுப் பார்க்கிறாவோ என ஐமிச்சப்பாட்ட மங்களேஸ்வரி ஒரு முழப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல அண்ணி நானும் இண்டைக்குத்தான் அந்தப் போயைக் கண்டனான்.நானும் நினைக்கிறன் அவர் படிக்கிறவராகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல,என்ன அவர் என்று, அவனுக்கு அவனுக்கு மரியாதை குடுத்துக் கதைக்காதையுங்கோ அவன் என்று சொல்லிக் கதையுங்கோ,உங்கடை அண்ணன்ரை பெண்சாதி உங்கடைஅண்ணி நான் என்னைவிட அவன் பெரிசோ என சிலம்பரசி சொல்ல கிணறு வெட்ட பூதம் கிளம்பின மாதிரியாகப் போகுதோ என நினைச்சவள் இல்லை அண்ணி என்று இழுத்தவள் அப்பு சொன்னவர் யாரையும் அவன் இவன் என்று கதைக்கக்கூடாதென்று அதுதான் என்று இழுத்தாள்,
;தாய்தகப்பன் வீட்டுக்குப் போன முருகதாசன் வீட்டுக்குள் நுழைந்த போது தகப்பன் சாய்மனைக் கவுச்சியிலிருந்து அன்றைய வீரகேசரியை வாசித்துக் கொண்டிருந்தார்.
தெல்லிப்பழை சங்கத்திற்கு எதிர்ப்பக்கமான மேற்குபு;புற தெருவோரத்தில் இருக்கும்: பொன்னையாவின் பேப்பர் கடையிலிருந்து அங்கு வேலை செய்யும் திருச்சிற்றம்பலம் வீடு வீடாக பேப்பர் குடுக்கும் போது சிதம்பரப்பிள்ளையின் வீட்டுப்படலையோடிருக்கும் உள்பக்க வேலிக் கிடுகில் செருகிவிட்டுப் போவதும்,அதைத் தனபாக்கியமோ அல்லது சிதம்பரப்பிள்ளையோ எடுத்து வைச்சு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பக்கத்திலும் கொஞ்சத்தை வாசித்த பக்கத்தில் கவனத்தில் எடுக்காத மிகுதியை வாசிப்பதும,; அந்த வீட்டில் நடக்கும் வழமையான ஒரு நடைமுறை .

அப்படித்தான் இப்பவும் தகப்பன் சிதம்பரப்பிள்ளை பேப்பர் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி முருகதாசன் வீட்டுக்குள் நுழைஞ்சு விறாந்தையை கடந்து தனது அறைக்குப் போன போது அடுப்படிக்குள் தாயார் தேங்காய் துருவும் சத்தம் கேட்க அம்மர் புட்டவிக்கப் போறா என நினைச்சவன் அம்மா குழல் புட்டா அவிக்கப் போறியள் என்று கேட்டுக் கொண்டே தனதறைக்குள் நுழைய ஓம் என்று தாயாரின் குரலம் கேட்கிறது.அவனைக் கண்ட மங்களம் அவளின்: மனதோரத்தில், அண்ணைக்கு ஞானம் என்னோடு படிக்கிறவர் என்று தெரியும்,நான் ஞானத்தை ஆரென்றே தெரியாது என்று அண்ணிக்குச் சொல்லிட்டன்,தங்கச்சியோடைதான் ஞானம் படிக்கிறவர் என்று அவர் அண்ணிக்குச் சொன்னாரென்றால் பிரச்சினையாகிவிடுமோ என்று குழம்பத் தொடங்கினாள் மங்களேஸ்வரி.
(தொடரும்….)
![]()
