இலங்கை
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் ஒலிபெருக்கிகளைப் பறித்த பொலிஸார்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி சத்தத்துடன் ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி அங்கிருந்த ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நல்லூரில் உள்ள பிரதான நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் பாடல்கள் ஒலிபரப்பபட்ட போதே வெள்ளிக்கிழமை பொலிஸார் இவ்வாறு செயற்பட்டனர்.
அங்கு வருகைதந்த பொலிஸார் தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற வகையில் பொலிஸாரின் செயற்பாடு அமைந்ததாக அங்கிருந்தவர்கள் விசனம் வெளியிட்டனர்.
![]()