இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா.. அநுர தரப்பிடம் சரத் வீரசேக கேள்வி

வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.

வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடைகளுடன் கலந்து கொண்டுள்ளார்கள். கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி இதனை ஏற்றுக் கொள்வாரா.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புசார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்துகின்றது.

நல்லாட்சி அரசாங்கமும் இதே தவறை இழைத்தது. அதன் விளைவு தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

எனவே, அரசியல் வெற்றிக்காக பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்டுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *