இலங்கை

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவா?

தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எவ்வித பிளவும் இல்லை என்றும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் எனக் கூறப்படுவதில் எந்தப் உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

“ஆரம்பத்தில் ஜனாதிபதியாருக்கும் பிரதமருக்குமிடையே மோதல் என்று கூறினார்கள். பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடு என்றார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போது பிரதமர் குறித்து புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்துமே அப்பட்டமான பொய்களாகும்.

பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை விளைவிக்கலாம். ஆனால், வைத்தியர்கள் எதற்கும் குழம்ப மாட்டார்கள்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *