இலங்கை

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதுடன், ஏற்கனவே இருந்த விமானங்களைப் புனரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், உக்ரைனின் அரச நிறுவனமான Ukrinmash உடனான அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில், இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட சுமார் 14.66 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் ஒரு பகுதி, British Virgin Islands-இல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் Bellimissa Holdings என்ற இடைத்தரகர் நிறுவனத்தின் ஊடாக சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

7 மில்லியன் டொலர் முறைகேடு

 

Ukrinmash-க்கு முழுத் தொகையும் சென்றிருக்கவில்லை என்றும், சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக FCID நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை | Daylight Robbery In The Bloody Mig Deal

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக செப்டம்பர் 10ஆம் திகதி FCID-யில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, செப்டம்பர் 11ஆம் திகதி FCID-க்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

முன்னாள் விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேராவும் செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கினார்.

இந்த ‘பெலிமிஸ்ஸா’ எனப்படும் நிறுவனத்தின் பின்னணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆயுத வர்த்தகர் டி.எஸ். லீ, அவரது மனைவி எங் லீ கிம் மற்றும் அவரது சகோதரர் லீ தியன் போக் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம்

2000ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட MiG விமானங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் விபத்துகள் காரணமாக சிங்கப்பூரின் ‘டி.எஸ். அலையன்ஸ்’ நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னணியை மறைப்பதற்காக ‘பெலிமிஸ்ஸா’ என்ற நிறுவனத்தை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை | Daylight Robbery In The Bloody Mig Deal

இந்த சர்வதேச ஆயுதப் பரிவர்த்தனைக்கு அப்போது ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க இராஜதந்திர ரீதியான ஆதரவை வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தரகு பணம் உதயங்க வீரதுங்கவின் உறவினரான லெலும் மனம்பெருமவின் இலங்கை வங்கிக் கணக்குகளுக்கும், டுபாயில் உள்ள ‘ஸ்டார் ஜி.எல்.ஜி.ஏ.’ நிறுவனத்தின் கணக்கிற்கும் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணம் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்ட விதம் தொடர்பான தகவல்களையும் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், Ukrinmash நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் டிமிட்ரி பெரெகுடோவ் பாரிஸில் இன்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையிலேயே இந்த விசாரணையில் இடம்பெறும் நிதி பரிமாற்றங்கள், கொள்வனவு நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தத்தில் தொடர்புடைய தரப்புகள் குறித்து அதிகாரிகள் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

குறிப்பாக MiG ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவால் வெளிப்படுத்தப்பட்டது.

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை | Daylight Robbery In The Bloody Mig Deal

அவர் 2009 ஜனவரி 8 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை MiG ஒப்பந்தத்தை மூடிமறைக்கும் முயற்சியுடன் தொடர்புபடுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்ககு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *