கவிதைகள்
ஈகையை மறவாதே! … கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

பா வகை: ஆசிரியத் துறை
எதிர்பார்ப் பின்றியே ஏழைக் களித்தல்
புதிய உணர்வினைப் புவினில் தூண்டும்
புதிய உணர்வும் புவினில்
அதியமான் போல அனைவரை மாற்றுமே!
வறியவர்ப் பசியைநீ வலியவே தீர்த்தால்
அறிவாய் உன்னையே ஐயனும் காப்பான்
அறிவாய் உன்னையே ஐயனும்
குறிவைத் தேர்ப்பான் குவலயம் காக்கவே!
முல்லைக் குத்தேர் முன்னவன் கொடுத்தான்
எல்லையும் உண்டோ இங்கே கொடைக்கே
எல்லையும் உண்டோ இங்கே
தொல்லை நீக்கியத் தூயவர் உயரவே!

![]()