பலதும் பத்தும்

நல்லூரில் தியாக தீபத்திற்கு வெண்கல சிலை

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின.

இதன்போது, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் வெண்கல உருவச் சிலை வைக்கப்பட்டு, அத்தோடு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை, தியாக தீபம் திலீபன் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் அதே நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *