இலங்கை

22 ஐ எதிர்க்க ஹரிணிக்கு அரசியல் பலம் இல்லை; கட்சியின் செயற்குழு உறுப்பினர் கூறுகிறார்

தேசிய மக்கள் சக்தி பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அரசியல் பலம் இல்லாத காரணத்தினால், அவர் 22ஆவது திருத்தம் குறித்து மௌனமாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள செய்தி த்தாள் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு அவரை நன்றாகத் தெரியும்; அதேபோல் அவர் மீது எனக்கு மரியாதையும் உண்டு. நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவில் அவர் என்னுடன் இணைந்து பணியாற்றினார். அவருக்கு வழங்கப்பட்ட பணியை அவர் மிகவும் சிறப்பாகச் செய்தார். அவர் அரசியலில் இருந்த ஒருவரல்ல. அதனால் அவருக்குப் பின்னால் அரசியல் பலம் இல்லை.

அரசியல் செய்பவர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்கு பலம் இருக்க வேண்டும். நான் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறேன், ஏனென்றால் சமசமாஜக் கட்சியின் பலமும் அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

பிரதமர் 22ஆவது திருத்தம் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் ஒரு அரசியல் விஷயம் குறித்துப் பேச முடிவது தனக்கு ஒரு பலம் இருந்தால் மட்டுமே.

அவருக்கு அதுபோன்ற பலம் இல்லாததால் அல்லது இது குறித்து எதுவும் பேசக் கூடாது என்று தீர்மானித்து அவர் மௌனமாக இருக்கலாம்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *