இலங்கை

சங்கு கூட்டணியில் இருந்து செந்தில்நாதன் மயூரன் விலகல்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பதவியில் இருந்தும், மாவட்ட குழுவில் இருந்தும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி, கூட்டணியின் செயலாளருக்கு நேற்று எழுத்துமூலம் கடிதம் அனுப்பி தனது விலகலை அவர் அறிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் ரெலோ சார்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் மாவட்ட இணைப்பாளராக செந்தில்நாதன் மயூரன் இதுவரை செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில், மாவட்ட இணைப்பாளர் பொறுப்பு உள்ளிட்ட கூட்டணியின் மாவட்ட மட்ட பதவிகளில் இருந்து அவர் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *