உலகம்

ஈரானுடனான போர் – 06 மாதங்களில் கையிருப்பில் இருந்த வெடிமருந்துகளை கரைத்த அமெரிக்கா

ஈரானுடனான போரின் காரணமாக அமெரிக்காவிடம் ஆயுதம், வெடிமருந்து கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை ஆய்வாளர் நேற்று இந்த விடயத்தை வெளியிட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான அறிக்கையில், பிப்ரவரி 28 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (OEF) நடவடிக்கைக்கு 33.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 22.3 பில்லியன் டொலர்கள் வெடிமருந்துகளுக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“OEF நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிமருந்துச் செலவினங்கள், மூலோபாய ரீதியான கையிருப்புப் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளதாகவும், வெடிமருந்து விநியோகத்தை மீண்டும் மேற்கொள்வதில் உள்ள தொழில்துறை சார்ந்த தடைகளையும் அறிக்கையில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

மேலும், நான்கு F-15 ரக விமானங்கள் அழிக்கப்பட்டது, ஒரு F-35 விமானம் சேதமடைந்தது, ஏழு KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்தது மற்றும் 30 வரையிலான MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் அழிக்கப்பட்டது உள்ளிட்ட அமெரிக்க விமானப் படைக்கு ஏற்பட்ட இழப்புகளையும் இது பட்டியலிடுகிறது.

இதேவேளை மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரின் போது ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவது குறித்த கவலைகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, அமெரிக்காவிடம் “வரம்பற்ற” அளவில் வெடிமருந்துகள் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *