நிகழ்வுகள்

கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் கையளிக்கும் நிகழ்வு

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யப்படுவதற்கு விநாயகர் சிலைகளை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கொட்டகலையில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரமாண்டமான 17 விநாயகர் சிலைகள் திருவருள் சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டு கொட்டகலையை சூழ உள்ள நகரங்கள் மற்றும் தோட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த சிலைகள்  திங்கட்கிழமை நடைபெற்றவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் பூஜை வழிபாடுகளுக்கு வைக்கப்பட்டடு 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யப்பபடவுள்ளது.

இந்நிகழ்வு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டு குழு தலைவர் ஆர். விஜயபாலன் ஜி தலைமையில் நடைபெற்றதுடன். ஏற்பாட்டு குழுவின் அங்கத்தவர்கள், நகர வர்த்தகர்கள் பொது  மக்கள் என அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *