பலதும் பத்தும்

தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர்

தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள தனியார் குளமொன்றில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர் | Elderly Man Sexually Harassed Koi Fish

குறித்த நபர் மிதிவண்டியில் அப்பகுதிக்கு வந்த பின்னர், குளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோய் மீன்களுக்கு துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை வீட்டுப் பணியாளரும் குளத்தின் உரிமையாளரும் அவதானித்து அவரை எதிர்கொண்டபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், குளத்தில் வளர்க்கப்பட்ட கோய் மீன்கள் தொடர்ச்சியாக விசித்திரமான முறையில் உயிரிழந்ததை அவதானித்த உரிமையாளர், காரணம் தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.

மேலும், குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோதே சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது. இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை மறுநாள் லாக் சி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது, சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளையே அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின்போது குறித்த நபர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த காலங்களிலும் விலங்குகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வரும் குளத்தின் உரிமையாளர், மீன்கள் வித்தியாசமான நிலையில் உயிரிழந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.

எனினும், CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயற்பாடு மற்றும் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாய்லாந்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *