இலங்கை

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் தொடர்ந்த வழக்கு நவம்பரில் பரிசீலனை

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என குற்றம் சாட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 14 எதிர்மனுதாரர்களுக்கு எதிராக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நவம்பரில் பரிசீலனை

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இருதரப்பின் எழுத்துமூல சமர்பணத்திற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *