இலங்கை

பசிலின் கைதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் அரசியல் பேரம்!

கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாக, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு தொழிலதிபருடன் அரசியல் பேரம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக எப்போதும் பல்வேறு பேரங்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த பேரம் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் 

 

எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு பேரம் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

பசிலின் கைதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் அரசியல் பேரம்! | Basil Rajapaksa Dhammika Perera

இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது.

ஆனால் இப்போது அந்தப் பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச. அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை

நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்?

இலங்கையிலிருந்த நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.

பொதுவாக எப்போதும் பல்வேறு பேரங்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த பேரம் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *