உலகம்

ஈராக் – ஈரான் எல்லையை மூடி ஈராக்!

சவுதி அரேபியா மீதான அண்மைய ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஷாலம்சே (Shalamcheh) எல்லைக் கடவையை மூடுமாறு ஈராக் உத்தரவிட்டுள்ளதாக வௌிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியா மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைத் தேடி விரிவான அளவிலான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது முக்கிய கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதை மீது, ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரியாத் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *