இலங்கை

விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள்

யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தினர் தனக்கெதிராக செயற்பட்டனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

வளைதள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தன்னையும் தமக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் கொடூரமாக வேட்டையாடிப் ராஜபக்சர்கள் பழிவாங்கினர்.

அதிகாரத்திற்கு வந்த ராஜபக்சர்கள்

 

தங்களைக் காப்பாற்றிய இராணுவத் தளபதியையே சிறையில் அடைத்தவர்கள் ராஜபக்சர்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள் | Rajapaksa Crossed Boundaries Observed Prabhakaran

 

நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக மூன்று வருடங்கள் கொடூரமான முறையில் யுத்தம் செய்தோம். அவர்களின் தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.

ஆனால், அந்தப் போர்க் காலத்தில்கூட பிரபாகரன், தங்களது குடும்பங்களையோ, எங்களது பிள்ளைகளையோ பழிவாங்கவில்லை.

போர் முடிந்த பின்னர், ராஜபக்சர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் தங்களது அரசியல் இலாபத்திற்காகவும், தனிப்பட்ட குரோதத்திற்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையும் கொடூரமாக வேட்டையாடினார்கள்.

மேலும், ஜனவரி 2008 இல், போரின் வியூகத்தை மாற்றி இராணுவத்தை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக நகரச் சொன்னதன் மூலம், மகிந்த, கோட்டாபய மற்றும் கருணாகொட ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை குழப்பவும், தனது வேகத்தைக் குறைக்கவும் முயன்றனர்” என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *