கவிதைகள்
“பட்டிமன்றம் நடத்தப் பாப்பையா சென்றுவிட்டார்” … கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
பட்டிக்காடு பட்டணம் பட்டிமன்றம் போட்டு
படுத்தவரும் பாமரரும் பலவற்றை அறிய
வைத்திட்ட ஆளுமை பேராசான் பாப்பையா
மறைந்து விட்டாரென்பதை மனமேற்க மறுக்கிறது
கல்யாண மாலை களையிழந்து நிற்கிறது
அவருடைய சீடர்கள் அழுதபடி நிற்கின்றார்
பட்டிமன்ற மேடைதனில் பாப்பையா இல்லாமல்
பார்க்கின்ற நிலையெண்ணி பதறுதே நெஞ்சம்

சிரித்த முகத்தோடு சிறப்பாகப் பேசுவார்
சிந்தனை முத்துக்களை சிரிப்போடு சிந்துவார்
நடுநிலையாய் தீர்ப்பை நயமாய் வழங்குவார்
அவர்முகத்தைக் காணாமல் அரங்கெல்லாம் அழுகிறதே
பாப்பையா மறைந்துவிட்டார் பசுந்தமிழும் அழுகிறது
பலவறிஞர் போற்றிடப் பட்டமன்றம் வளர்த்தார்
வாளர்த்தவரைத் தேவன் வானுலகு அழைத்திட்டான்
பட்டிமன்றம் நடத்தப் பாப்பையா சென்றுவிட்டார் !
![]()