பலதும் பத்தும்

கார் என்ஜினுக்குள் பதுங்கியிருந்த மலைப் பாம்பு

வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் என்ஜினுக்குள் சுமார் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்துடன் வசித்து வரும் விண்டி டக், வழக்கம்போல் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் காரின் என்ஜினைப் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அதற்குள் விசித்திரமான அசைவுகள் இருப்பதை அவர் கவனித்தார்.

என்ஜின் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், முதலில் அது அழுக்கடைந்த குழாய் என அவர் நினைத்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பொருள் அசையத் தொடங்கியதுடன், அவரை நோக்கி சீறியுள்ளது. அப்போதுதான் அது சுமார் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு என்பதை அவர் அறிந்துகொண்டார்.

இதையடுத்து, காரின் என்ஜினுக்குள் பதுங்கியிருந்த பாம்பை மீட்பதற்காக மில்வாக்கி பகுதியிலுள்ள விலங்குகள் மீட்புக் குழுவினருக்கு கார் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்து, நீண்ட கம்பின் உதவியுடன் பாம்பை மெதுவாக வெளியே வரச் செய்தனர்.

பல மணி நேர முயற்சிக்குப் பின்னர், என்ஜின் பகுதியில் மறைந்திருந்த மலைப்பாம்பு இறுதியாக வெளியே வந்தது.

பின்னர் மீட்புக் குழுவினர் அதைப் பாதுகாப்பாகப் பிடித்து, விலங்குகள் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கார் என்ஜினுக்குள் மலைப்பாம்பு பதுங்கியிருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *