இலங்கை

ராஜபக்சர்களின் கோரமான பக்கத்தை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தங்களது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த, தெஹிவளை காலி வீதி, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள 163/02 இலக்கமுடைய தமக்கு சொந்தமான வீடு மற்றும் காணிப் பகுதியை யோஷிதவுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

14 – 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிவாதியான யோசித ராஜபக்சவிற்கு 33 லட்சத்து 80 ரூபாய் போன்ற மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரிட்டதாகவும், அக்காணி அதைக் காட்டிலும் அதிக பெறுமதியைக் கொண்டாகும்.

பெண் சாட்சியம்

குறிப்பிட்ட தொகையை விட மேலதிக தொகையைக் கேட்ட போதிலும் அத்தகைய கூடுதல் தொகை தனக்குக் கிடைக்கவில்லை என 79 வயதுடைய கின்தொட்ட விதானகே ஐரின் சில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

ராஜபக்சர்களின் கோரமான பக்கத்தை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண் | Yositha Cheated A Old Lady

காணியை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்திலும் காணி கையளிப்புப் பத்திரத்திலும் டெய்சி பொரெஸ்ட் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பத்திரம் எழுதும்போதோ அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதோ டெய்சி பொரெஸ்ட் அங்கு இருக்கவில்லை.

தன்னை வாகனமொன்றில் ஏற்றி விஹாரம மாவத்தை அல்லது அவ்வாறான பெயர் கொண்ட ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு குறித்த பத்திரத்திலும் ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர்.

சொத்து மோசடி

குறிப்பிட்ட தொகையும் எனக்கு இரு தடவைகளாகவே கிடைத்தது என சாட்சியமளித்த குறித்த பெண் தெரிவித்தார்.

ராஜபக்சர்களின் கோரமான பக்கத்தை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண் | Yositha Cheated A Old Lady

வழக்கின் 53ஆவது சாட்சியாக அழைக்கப்பட்டு சாட்சி கூண்டில் நின்ற பெண் கடும் சிரமத்திற்கு மத்தியில் சுமார் 20 நிமிடங்கள் சாட்சியமளித்துள்ளார்.

700 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்து காணிகள் மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்யச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசிதவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *