இலங்கை

ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் – தப்பிய ஒருவர்

நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் மீதான வழக்குகள் சிக்கலானவை என்பதால், பிணை கிடைக்க குறைந்தது ஐந்து முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் பிணை கிடைக்காமலும் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக கருதப்பட்ட கபில சந்திரசேன மற்றும் ஊடகவியலாளர் ரஜீவ் பிரகாஷ் ஜெயவீர ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிமல் பெரேரா முக்கிய சாட்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ச எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அவரது விடுதலை சட்ட நடவடிக்கைகளின் போக்கைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *