உலகம்

சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – லண்டனில் வேகவரம்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

“உயிர்களைக் காக்கவும், பாதுகாப்பான மற்றும் மக்கள் விரும்பும் வகையிலான தெருக்களை உருவாக்கவும்” கிரீன்விச் கவுன்சில் தனது பகுதி முழுவதும் மணிக்கு 20 மைல் வேக வரம்பை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

தென்கிழக்கு லண்டனில் உள்ள இந்த உள்ளாட்சி அமைப்பு ஆண்டின் பிற்பகுதியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கிரீன்விச்சில் உள்ள 72 சதவீதமான சாலைகளில் மணிக்கு 20 மைல் வேக வரம்பு அமலில் உள்ளதாகவும், ஆகவே இந்த பொதுவான வரம்பை ஓட்டுநர்கள் இலகுவாக புரிந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான விபத்துக்கள் அதிக வேகத்தில் வாகனங்கள் செல்லும் சாலைகளிலேயே நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மணிக்கு 20 மைல் வேகத்தில் நடக்கும் விபத்துகளை விட, மணிக்கு 30 மைல் வேகத்தில் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பான வேக வரம்புகள், கிரீன்விச்சில் உள்ள அனைவருக்கும் சாலைகளைப் பாதுகாப்பானதாகவும், வரவேற்கத்தக்கதாகவும் மாற்றுவதற்கான ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *