இலங்கை

“நான் போர் குற்றாவாளி அல்ல, நாட்டிற்காகவே போரிட்டேன்” – சவேந்திர சில்வா

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்ற தவறிழைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

இந்தியாவை மையமாகக் கொண்ட ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  சர்வதேச ரீதியில் தனக்கு தடைகள் விதிக்கப்பட்டதன் அடிப்படையை கேள்விக்குட்படுத்துவதாகவும்   கூறியுள்ளார்.

இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க முயன்றதாக கூறிய அவர், இலங்கைப் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொழில்முறை ரீதியாகப் போரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தடைகளை கேள்விக்கு உட்படுத்திய அவர்,  அண்மையில் பிரித்தானியாவிலும் எனக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் எதற்காக? நான் என்ன தவறு செய்தேன்? நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *