இலங்கை

சிங்கள, பௌத்த தலைவர்களே அரசாங்கத்தின் ”வேட்டை”இலக்கு

சிங்கள, பௌத்த தலைவர்களே அரசாங்கத்தின் இலக்காக இருக்கின்றது. இதற்காக அவர்கள் மீது திருடர் என்ற முத்திரைகளை குத்தி அவர்களை அரசாங்கம் வேட்டையாடி சிறையில் அடைக்கின்றது. ஆனால் ரிஷாத் பதியுதின் போன்றவர்களை விட்டுவிடுகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில்  நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், நாமல் ராஜபக்‌ஷவின் கைது தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் கூறுகையில்,

சிங்கள தலைவர்கள் யாரோ அவர்கள் அனைவரையும் ஏதாவது குற்றச்சாட்டில் அரசியலமைப்பு ரீதியிலான சர்வாதிகார போக்கில் சிறையில் அடைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. அதனுள் நானும் இருக்கலாம். முன்னாள் அரசாங்கத்தில் ரிஷாத் பதியுதின் போன்றோர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அவர் எந்தவிதமான பொருட்களையும் பகிர்ந்தளிக்கவில்லையா? அவர் மிகவும் சட்டத்திற்கு உட்பட்டு வேலை செய்தவரா? இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அவரைப் பற்றி எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லையா? இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

அதாவது இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு சில இலக்குகள் உள்ளன. தீமையான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது அதற்கு எதிராக இருக்கும் சிங்கள பௌத்த தலைவர்களையே தெரிவு செய்து அடக்குமுறைகளை முன்னெடுக்கின்றனர். இதனை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது உங்களை காட்டிக்கொடுப்பதற்காக அநுரகுமார முன்னெடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகளுக்கு எதிராக முன்வரவுள்ள மற்றும் அதற்கு எதிராக செயற்படவுள்ள தலைவர்களையே ஒன்றன் பின் ஒன்றாக திருடர்கள் என்ற முத்திரைகளை குத்தி எவருடையதாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு அதனை அடிப்படையாகக் கொண்டு வேட்டையாடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *