உலகம்
எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார் பிரித்தானிய முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மா்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பதவி வகித்த கியா் ஸ்டாா்மா், கடந்த மாதம் அப்பொறுப்புகளிலிருந்து விலகியதைத் தொடா்ந்து ஆண்டி பா்ன்ஹாம் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றாா்.
பிரிட்டன் நாடாளுமன்றம் கோடைகால விடுமுறை முடிந்து, மீண்டும் தொடங்கியுள்ளது.
சா்வதேச விவகாரங்கள் மற்றும் சமூகப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக கியா் ஸ்டாா்மா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
![]()