வார்த்தைகளில் நல்லிணக்கம் செயலில் பெரும் அடக்குமுறை!; யாழில் இலங்கை அரசு மீது சர்வதேச மன்னிப்பு சபை சாடல்

தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பலமுறை பேசியுள்ளது. ஆனால் இதுவரை, எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. உண்மையில், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இந்த சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நடத்திய சமீபத்திய நிகழ்வுக்கு வெளியே நடந்தவை, அந்த இடைவெளிக்கான ஒரு சிறந்த உதாரணமாகும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் தெரிவித் தார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக போராட்டத்தைச்சுமந்து நிற்கும் குடும்பங்களின் பக்கத்தில் நிற்ப தற்கும், பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட வர்களுக்கான சர்வதேச தினமான இன்றைய நாளில் அவர்களுடன் இணைவதற்கும்.நான் இங்கு வந்துள்ளேன்.
2023 இல் நான் முதன்முறையாக முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்குச் சென்றபோது, நீதியையும் பதில்களையும் தொடர்ந்து தேடி தடி வரும் தாயார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மன றுதியைக் கண்டு நான் வியப்படைந்ததை நினைவில் வைத்திருக்கிறேன்; அன்றிலி ருந்து இன்றுவரை அது என்னைப் பெரிதும் பாதித்துள்ளது.
அவர்களில் பலருக்கு, இது பல வருட காத்திருப்பு, போராட்டம், தேடுதல் மற்றும் வேதனை ஆகியவற்றை உள்ளடக்கியது. அதே நேரத்தில் பதில்களைக் கோருவ தையும், கைவிட மறுப்பதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நாள் மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். குடும் பங்கள் மற்றும் தாயார்களின் இந்தப் போராட் டத்தை நீங்கள் ஒரு முறை நேரில் கண்ட பிறகு, அவர்களுடன் நிற்காமல் இருப்பது சாத்தியமில்லை என்பதால் தான் நான் மீண் டும் வருகிறேன் என்று நினைக்கிறேன். குடும்பங்களின் தைரியம், விடாமுயற்சி
மற்றும் கண்ணியம் ஆகியவை நம்முடன் நிலைத்து நின்று, நாமும் இந்த குடும்பங்க ளின் பக்கத்தில் நின்று இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாகத் தொடர வேண்டும் என்ற விருப்பத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச மன்னிப்பு சபையில் உள்ள எனது சக ஊழியர்கள் பலர், அவர்களில் சிலர் இலங்கையிலிருந்தும், சிலர் உலகம் முழுவ திலிருந்தும் வந்தவர்கள். பல வருடங்களாக இந்தப் பயணத்தில் குடும்பங்களின் பக்கத் தில் துணை நின்றுள்ளனர்.
நாம் என்ன பங்கு வகித்தாலும், அது இறுதி யில் குடும்பங்களால் தாங்கிப் பிடிக்கப்பட்ட போராட்டத்திற்குச் செய்யப்படும் ஒரு சிறிய பங்களிப்பாகவே இருக்கும்.
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர் களின் குடும்பங்களுக்கு, இன்றைய நாள் என்பது வெறும் ஒரு நினைவேந்தல் நாள் மட்டுமல்ல. இன்றைய மாநாடு “நீதிக்கான நீண்ட பயணம் “என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தாயார்களுக்கும், அவர்களில் பல ருக்கும், உண்மை மற்றும் நீதிக்கான தேடல் எந்தப் பதில்களும் இன்றி பல தசாப்தங்களா சத் தொடர்கிறது என்பதையும், நிலைமை இப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் நினைவூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைகிறது.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் வாக்கு றுதிகளை அளித்துள்ளன, பல குழுக்களை அமைத்துள்ளன மற்றும் நிறுவனங்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் குடும்பங்களுக்கான முதன்மை யான கேள்வி, தங்களது அன்பிற்குரியவர் களுக்கு என்ன நடந்தது? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இதற்கான பதில்கள் யாரிடம் உள்ளன? இறுதியாக, இதற்கு யார் பொறுப்பு??? என்பது இன்னும் பதிலளிக் கப்படாமல் உள்ளது.
நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண் டிய ஒரு விஷயம் உண்டு. இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படுதலின் அளவு மற்றும் அதன் தொடர்ச்சி ஆகிய
வை, நாட்டின் மோதல் மற்றும் அரசியல் வன்முறை வரலாற்றிலிருந்து பிரிக்க முடியா தவை.
தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள் நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கை யில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந் தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்பு சபை மதிப்பிட்டுள்ளது.
இவை வெறும் வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்ல. சுதந்திரத்தை சட்டவிரோதமாக பறித்தல், தகவல்களை மறுத்தல் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளித்தல் ஆகி யவற்றின் பரந்த வரலாற்றின் ஒரு பகுதியாக இவை அமைகின்றன.
எனவே, காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்கள் எங்கே இருக்கிறார் கள் என்பதைக் கண்டறிவதில் தொடரும் தோல்வியானது, எப்போதும் சித்தரிக்கப்ப டுவது போல வெறும் முடியாத ஒரு நிர்வாக நடைமுறை மட்டுமல்ல; அது பொறுப்புக் கூறலின் மிக ஆழமான தோல்வியைப் பிரதி பலிக்கிறது.
நாம் அறிந்தபடி, காணாமலாக்கப்பட்டவர் களுக்கான அலுவலகம் உட்பட பல வழிமு றைகளை இலங்கை நிறுவியுள்ளது.
இத்தகைய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். ஆனால், காணாமலாக்கப் பட்ட நபர்களுக்கு என்ன நடந்தது மற்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது, இந் தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை நிறுவுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டும் பெற உரிமை உண்டு.
இலங்கை,மனிதப் புதை குழிகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பிற இடங்களின் சான்றுகளைத் தொடர்ந்து எதிர் கொண்டு வருவதால், இந்த வேறுபாடு குறிப் பாக முக்கியமானது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, செம் மணியில் மட்டும் இதுவரை குழந்தைகள்
உட்பட 583 எலும்புக்கூடு எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அது வெறும் ஒரு இடத் தில் மட்டுமே.
பொதுமக்களின் நம்பிக்கையை நிறுவும் வகையில், போதுமான வெளிப்படைத்தன் மையுடன் சர்வதேச தடயவியல் தரநிலைக ளுக்கு ஏற்ப இந்த விசாரணைகள் சுயாதீன மாக நடத்தப்பட வேண்டும்.
இந்த மீறல்களுக்கு வழிவகுத்த சட்ட அமுலாக்க முகாமைகளின் பங்கையும் கவன மாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், ஒரு செயலை நேரடியாக உடலளவில் செய்த நபரை அடையாளம் காண்பதோடு மட்டும் பொறுப்புக்கூறல் முடிந்துவிட முடியாது. மேலும் இந்த விசாரணைகள் காத்திருக்க முடியாது, காத்திருக்கவும் கூடாது.
இப்போதும் கூட, காணாமலாக்கப்பட் டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பதில்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு நச ரப்தங்களாகத் தேடி வந்த நிலையில் உயிரி முந்துள்ளனர். நாம் எவ்வளவு காலம் தாமதிக் கிறோமோ, அவ்வளவு காலம் பதில்களை அறிவதற்கான வாய்ப்பை இழந்து கொண் டிருக்கிறோம்.
தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பலமுறை பேசியுள்ளது. ஆனால் இதுவரை, எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. உண்மையில் காணாமலாக்கப்பட் டவர்களுக்கான இந்த சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகை 2 2 16 17 GSS 11 10 போனோர் பற்றிய அலுவலகம் நடத்திய சமீபத்திய நிகழ்வுக்கு வெளியே நடந்தவை, அந்த இடைவெளிக் கான ஒரு சிறந்த உதா ரணமாகும்.
நிகழ்வுக்கு வெளியே போராட்டம் நடத்த முயன்ற தாயார்கள் மற்றும் குடும்ப உறுப் பினர்களுக்கு எதிராக காவல்துறை மேற் கொண்ட கொடூரமான நடவடிக்கை, அமை தியான வழியில் ஒன்று கூடும் உரிமையை வசதி செய்து தர வேண்டிய இலங்கை அர சாங்கத்தின் கடமைக்கு முற்றிலும் எதிரானது.
இந்த முரண் எவருக்கும் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். யாருக்காக இந்தி கழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோ, அவர்களே பலவந்தமாக அதிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டனர்; இந்த நிலை மாற வேண்டும்.
கடந்தகால உள்நாட்டு வழிமுறைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த இடங் களில், தனது அணுகுமுறை முந்தைய அர சாங்கங்களை விட வேறுபட்டதாக இருக்கும் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பும் மையும் அரசாங்கத்திற்கு இன்னும் உள்ளது. சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலைத் தொடர உலகளாவிய அதிகார வரம்பை சர்வதேச மன்னிப்பு சபை ஆதரிக் கிறது.
தமிழ், சிங்களவர், முஸ்லிம் அல்லது பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இலங்கையில் பலவந்தமாக காணாமலாக் கப்பட்டவர்களின் குடும்பங்களின் இந்தப் பயணத்தில் சர்வதேச மன்னிப்பு சபை எப் போதும் ஒரு துணையாக இருந்து வருகிறது -என்றார்.
![]()