வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இலங்கையில் இன்னும் முற்றுப் புள்ளி இல்லை!; நீதிக்காக உயிர் துறக்கும் தமிழ் தாய்மாரின் கதறலுக்கும் இன்னமும் முடிவில்லை

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இதுவரை எந்தவொரு இறுதிப் புள்ளியும் இல்லை. இருப்பினும், இந்த துயரத்தின் பாரிய அளவைக் காண முடிகிறது என தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ், முறையான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருந்தபோதிலும்,
அரசு அதிகாரிகளால் இத்தகைய காணாமல் ஆக்கப்படுதல்கள் மறுக் கப்படுவதை நாம் எதிர்கொள்கிறோம் என்றார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோ ருக்கான சர்வதேச தினமான நேற்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நீ திக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில்,
சர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் நாளில், உங்கள் அனைவரு டனும் யாழ்ப்பாணத்தில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்க ளின் சங்கங்கள், இந்த மிக முக்கிய மான மாநாட்டில் என்னை பங்கேற்க அழைத்ததற்காக எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நிகழ்வு நம்மை மேலும் நெருக்கமாக்கும் என்றும், காணா மல் ஆக்கப்படுதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது பேரழிவை ஏற்படுத்தும் விளை வுகளுக்குத் தீர்வு காண்பதற்குமான நமது பகிர்ந்தளிக்கப்பட்ட அர்ப்ப ணிப்பை உறுதிப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.
கற்பனை செய்ய முடியாத துயரங் களைச் சகித்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் நமது எண்ணங்க ளும் இதயங்களும் உள்ளன.அவர் களின் மன உறுதியும் மீண்டெழும் ஆற்றலும், உண்மை மற்றும் நீதிக் கான நமது தேடலுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.
இந்தப் பணிக்குழு, மனித உரிமை கள் பேரவையால் உருவாக்கப்பட்ட பழமையான பணிக்குழுக்களில் ஒன் றாகும். வலிந்து காணாமல் ஆக்கப் பட்டதற்கு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது உருவாக்கப் பட்டது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங் கமாக, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படக்கூடிய மிகக் கொடூர மான குற்றங்களில் ஒன்றாக இதனைக் கருதி, இக்குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர நாடுகள் முன்வர வேண் டும்.
எனவே, இந்த பணிக்குழுவைப் பற்றி நான் இன்னும் விரிவாகச் சில விஷயங்களைக் குறிப்பிட்டாக வேண் டும்.
எமக்கு ஒரு மனிதநேய ஆணை உள்ளது. வலிந்து காணாமல் ஆக் கப்பட்டவர்களின் வழக்குகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர் களின் உண்மை மற்றும் நீதிக்கான தேவைகளுக்கும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் இடையே ஒரு இணைப் பாக நாம் செயல்படுகிறோம்.
இதுவரை, எங்களது மனிதநேய ஆணையின் கீழ் 61 நாடுகளிலிருந்து 626க்கும் அதிகமான வழக்குகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். குடும் பங்களுக்கு ஆதரவளிப்பதில் மிக முக்கியமான பங்காற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு எமக்கு எப்போதும் கிடைத்து வருகின்றது.
தொகுத்துக் கூறினால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டல் என்பது ஒரு உலகளாவிய பிரச்சினையாக உருவெ டுத்துள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகவும், அளப்பரிந்த துயரங்களை ஏற்படுத்தும் சர்வதேச மனித உரிமை மீறலாகவும் உள்ளது.
முறையான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருந்தபோதிலும், அரசு அதிகாரிகளால் இத்தகைய காணாமல் ஆக்கப்படுதல்கள் மறுக்கப்படுவதை நாம் எதிர்கொள்கிறோம்.
செயற்பாட்டாளர்கள், மனித உரி மைப் பாதுகாவலர்கள், ஊடகவிய லாளர்கள், அரசின் எதிர்ப்பாளர்கள் அல்லது சந்தேகிக்கப்படும் ஆதர வாளர்கள், இன மற்றும் மத சிறுபான் மையினர், மனிதக் கடத்தலால் பாதிக் கப்பட்டவர்கள், மற்றும் எல்லைப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தப்பிச் செல்பவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு இலக்காகியுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, யாரெல்லாம் பாதிக்கப்பட் டவர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம். காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் மட்டுமன்றி, அந்த வலிந்து காணாமல் ஆக்கப்படலின் நேரடி விளைவாகப் பாதிப்பை அனுபவித்த எந்தவொருவரும் ‘பாதிக்கப்பட்டவ ராகவே ‘கருதப்படுவர்.
எனவே, இங்கு வருகை தந்துள்ள தாய்மார்களே, பயனுள்ள தேடுதல் நடவடிக்கைகள், முறையான விசா ரணைகள் மற்றும் உண்மையைக் வெளிக்கொணர்தல் இல்லாத கார ணத்தால் நீங்கள் அனுபவித்து வரும் அனைத்து துயரங்களையும் நாங்கள் அறிவோம்.
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முதல் நாளைப் போலவே இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஏனெ னில், காணாமல் போன முதல் நாளில் இருந்த அதே வலியும் துயரமும் இன் றும் அப்படியே இருக்கிறது.
இதன் காரணமாக, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்களுடன், குறிப்பாக தாய்மார்களுடனும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும்
பிறருடனும் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக் கைக்கு இதுவரை எந்தவொரு இறுதிப் புள்ளியும் இல்லை. இருப்பினும், இந்த துயரத்தின் பாரிய அளவைக் காண முடிகிறது. எங்களது பணிக் குழு மட்டும் இதுவரை 12,000-க்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான வழக் குகள் 1980-கள் மற்றும் 1990-களின் ஆரம்பத்தில் ‘ஜே.வி.பி எனக் குறிப் பிடப்படும் மக்கள் விடுதலை முன் னணியின் கிளர்ச்சியுடன் தொடர் புடைய சந்தேகத்திற்குரிய சிங்கள இளைஞர்கள், அரச பாதுகாப்புப் படைகளால் வலிந்து காணாமல் ஆக் கப்பட்ட சம்பவங்களோடு தொடர்பு டையவை ஆகும்.
அரச பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப் படும் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டல்கள், தனிச்சையான தடுப்புக் காவல்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்கு புறம்பான படுகொலைகளை பணிக்குழு ஆவணப்படுத்தியுள்ளது. மேலும், அரசு அதிகாரிகளுக்கு எதிரான பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளின் இன்மை ஆகியவை இழைக்கப்பட்ட மீறல்களின் முதன்மை காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எங்களால் பரிசீலிக்கப்பட்டு அனுப் பப்பட்ட கணிசமான எண்ணிக்கையி லான வழக்குகள், அரசுப் படைகளுக் கும் தமிழின விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே நடந்த ஆயுத மோதலின் போது தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களு டன் தொடர்புடையவை. இந்த ஆயுத மோதல் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது.
பரவலான மற்றும் திட்டமிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்க ளுக்கு மேலாக, ?வெள்ளை வேன்? காணாமல் ஆக்கப்படுதல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக ளின் பின்னணியில் காணாமல் ஆக்கப் படுதல்கள், பணயத் தொகை அல்லது பொருளாதார இலக்குகளுக்காகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்ற வேறு வடிவங்களிலான காணாமல் ஆக்கப்படுதல்களும் இடம்பெற் றுள்ளன.
புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் களையும் பணிக்குழு அங்கீகரித் துள்ளது. இவை வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு ஒப்பான கடுமை யான குற்றங்களாகும். இக்குற்றங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநிலை களுக்கு ஏற்ப முழுமையாக விசாரிக் கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டல் கள் நிலங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் எவ்வாறு தொடர் புபட்டுள்ளன என்பதையும், இரா ணுவம் மக்களின் நிலங்களை எடுத் துக்கொண்டதால் குடும்பங்களும் சமூகங்களும் எவ்வாறு கொடூரமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளன என்பதையும் நான் கேட்டறிந்தேன்.
உண்மை, நீதி, இழப்பீட்டு நடவ டிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழா மைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
அவர்கள் தனிப்பட்ட அச்சுறுத்தல் கள், நிதி மற்றும் உணர்வுரீதியான சுமைகளை எதிர்கொள்வதோடு, வாழ் வாதார நிலைமைகளின் சீரழிவையும் சகித்துக் கொள்கின்றனர்.
எந்த வொரு தகவலும் கிடைக் காமலேயே பல தமிழ் தாய்மார்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என் பதை நான் கேட்டறிந்தேன். காணா மல் ஆக்கப்பட்ட தனது குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறி யாமலேயே எந்தவொரு தாயும் உயி ரிழக்கக் கூடாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருப்பதால், இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தனித்துவமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவரை இழக்கும் போதும், பெண்கள் சமூகப் புறக்கணிப்பு மற் றும் ஆண்களின் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் சமூகங்களில் இது மேலும் மோசமடைகிறது.
நாள்தோறும் சந்திக்கும் சவால் களுக்கு மத்தியில், காணாமல் ஆக் கப்பட்டவர்கள் மறக்கப்படுவதை அனுமதிக்க மறுத்து, உறவினர்களும் உயிர் பிழைத்தவர்களும் போராடி வரு கின்றனர். சிலர் தனியாகப் போராடு கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சங்கங்கள் மற்றும் கூட் டமைப்புகளை உருவாக்குவது அவர் களை மேலும் வலுப்படுத்துகிறது.
உலகெங்கிலும் நான் கண்டது என் னவென்றால், குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு இடையேயான வேறுபாடு களைக் கடந்து ஒன்றிணையும் போது, அரசிடம் இருந்து முடிவுகளையும் பதில்களையும் கோருவதற்கான அவர் களின் சக்தி மேலும் அதிகரிக்கிறது.
இன்று, தாய்மார்கள் மற்றும் குடும் பங்களின் இந்த எழுச்சியைக் காண் பது மிகவும் சக்திவாய்ந்தது. உங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒன்று பட்டு போராடும் உங்கள் பணிக்கு, எங்களது ஆழமான போற்றுதலையும் ஒற்றுமையையும் தெரிவித்துக் கொள் கிறேன்- என்றார்.
![]()