பலதும் பத்தும்

கட்டியிருந்த சேலையால் காப்பாற்றிய பெண்.. நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிவரஞ்சனி பேட்டி

சில தினங்களுக்கு முன்பாக நேபாளில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஓடியது. அதில் சிவரஞ்சனி என்ற ஒரு பெண் அளித்த பேட்டியில் தான் கட்டியிருந்த சேலையால் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் காப்பாற்றியதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தில் நேரிட்ட இயற்கை பேரழிவு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த திருச்சி உறையூர் சேர்ந்த சிவரஞ்சனி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அவர் பேசும்போது கைலாஷ் மானசரோவர் செல்வது வாழ்நாளின் ஒரு கனவாக இருந்த நிலையில் அதற்காக இவர் கடந்த 23ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள டிராவல்ஸ் மூலமாக பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கட்டியிருந்த சேலையால் காப்பாற்றிய பெண்.. நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிவரஞ்சனி பேட்டி | Nepal Flood Survivor Sivaranjini Interview

அங்கிருந்து 24 ஆம் தேதி அவர் காட் மாண்டுவில் இருந்து காலை புறப்பட்டதுடன் ஷியாகுல் பேசி சென்ற இடத்தில் தங்கி 26 ஆம் தேதி மீண்டும் பயணத்தை தொடங்கிய நிலையில் கை ரோவ என்ற எம்பஸுக்கு செல்லும் வழித்தடங்கள் முழுவதும் மோசமான நிலையில் இருந்ததாகவும் அதே நேரம் இயற்கையான சூழலை ரசித்துக்கொண்டு சென்றபோது திடீரென ஒரு கரும் புகை எழுந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

57 பேர் யாத்திரி சென்ற நிலையில் நண்பர்கள் மற்றும் தூரத்து உறவினர்களான 17 பேருக்கு மற்றும் இருக்க இருப்பதால் கூடுதலாக மூன்று பேர் வந்து சேர்ந்தவுடன் 21 பேர் சென்றனர். கைரோ எம்பஸிக்குமூன்று கிலோமீட்டர் தொலைவு உள்ள நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வண்டியை ஓட்டிய டிரைவர் இறங்கி சென்றது தெரியாத நிலையில் கரும் புகையுடன் நீரும் கலந்த நிலையில் வந்த வெள்ளத்தில் முழுவதுமாக அனைத்தும் அடித்து செல்லப்பட்டதாகவும் அது அவர்களுடைய வாகனத்தை ஒரு வளைவில் நிறுத்தியதால் அனைவரும் பத்திரமாக கடவுளின் அருளால் தப்பித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

சிவன் பார்வதியாக:

தங்களுடைய வாகனத்தில் உள்ள அட்டெண்டர் ஓடிவிட்டதாகவும் தங்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொருவர் உதவியுடன் மேல் ஏறி வந்தவுடன் மாயவரத்தை சேர்ந்த பூங்குழலி மற்றும் ரத்தினகுமார் ஆகியோர் சேர்ந்து வேனில் இருந்து அவர்களை ஏற முடியாதவர்களை மேலே ஏற்றி விட்டதாகவும் தனது கட்டியிருந்த சேலையை கழற்றி கொடுத்து மற்றவர்களை காப்பற்றிய அவர்கள் சிவன் பார்வதி ஆகவே தெரிந்தார்கள் என்று நெகிழ்ச்சி உடன் தெரிவித்திருக்கிறார்.

கட்டியிருந்த சேலையால் காப்பாற்றிய பெண்.. நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிவரஞ்சனி பேட்டி | Nepal Flood Survivor Sivaranjini Interview

மேலே ஏறிச்சென்ற அவர்கள் அங்கு ராணுவ முகாமில் தங்கி இருந்தவர்கள் இறந்து விட்டதாகவும். அங்கு தங்கும் இடத்தை தங்களுக்கு திறந்து கொடுத்ததால் நிம்மதி அடைந்ததாகவும் இல்லையெனில் பலரும் பனியில் உறைந்து இருந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்கள்.

அதேபோல், மேலே இருந்து பார்த்தபோது கைலாசநாதர் பார்க்கச் சென்று அவர்களுக்கு அவரது இருப்பை காட்டியது போன்று அந்த காட்சி அமைந்ததாகவும். அந்த காட்சியை பார்த்த பிறகு ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் 57 பேர் யாத்திரைக்கு சென்ற நிலையில் இன்று இவர்கள் நிலை என்ன ஆனது என்பதுதான் அவர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார். மேலும், அவர்கள் முகாமில் பல்வேறு சிரமங்களை சந்தித்து நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தங்களுடய உறவினர்கள் பணியாற்றுவதால் அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

பிறகு அவர்கள் நம்பிக்கை தெரிவித்த பின்னர் மத்திய மாநில அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு அவர்களை மீட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அவர் மத்திய அமைச்சர்களாக இருக்கட்டும் தமிழக அமைச்சர்களாக இருக்கட்டும் சிறப்பான ஒத்துழைப்பை அளித்ததுடன் பழகுவதற்கு எளிமையான முறையில் இருந்ததாக நெகழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

கட்டியிருந்த சேலையால் காப்பாற்றிய பெண்.. நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிவரஞ்சனி பேட்டி | Nepal Flood Survivor Sivaranjini Interview

நமக்கு இந்தியாவைத் தாண்டி சென்றால் தான் இந்தியாவின் அருமை தெரியும் என்றும், உண்மையிலேயே இந்தியா ஒரு சொர்க்க பூமி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதற்காக இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தங்கள் சொர்க்கமான பூமியில் இருப்பது உணர்ந்தாகவும் தெரிவித்தார்.

மேலும், இது போன்ற பேரிடர் நேரிடும் காலங்களில் அரசு மற்றும் மீட்பு பணிக்கான தொடர்பு கொள்வதற்காக அரசு ஒரு அவசர எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும், இதனை மத்திய அமைச்சர்கள் ஜெயசங்கர் மற்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாகவும் அதனை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் கொடுத்து உள்ளார்.

அதோடு இவர்கள் தங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்ட நிலையில் அதனை தங்களது இல்லத்திற்கு கொண்டு வந்து தருவதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button