அநுரவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் ரணில்!; தென்னிலங்கையில் அரசியில் திடீர் திருப்பம்

இலங்கை அரசியலில் பலமாக உள்ள அநுர அரசாங்கத்திற்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியூகங்களை அமைத்து வருகிறார்.
அதற்கமைய எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டணியாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
ரணில் – சஜித் கட்சிகள்
தற்போது அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
“அடுத்த தேர்தலுக்கு நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தே செல்லவுள்ளோம். அது இப்போது தீர்மானிக்கப்பட்டு விட்டது. உரிய நேரத்தை பின்னர் அறிவிப்போம். ஒரு கூட்டணியாகவே செயற்படும். ஐக்கிய தேசிய கட்சியும் நாமும் இணைந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை நாட்டின் மக்கள் அறிவார்கள் என ” என ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
![]()